விஜயகாந்தை "கிங்" ஆக ஏற்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை: முரளிதரராவ்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தங்கள் கூட்டணியின் "கிங்" ஆக ஏற்பதில் பாஜகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இணையதளம் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாஜக பொதுச் செயலாளர் முரளிதரராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் 'கிங்' ஆக ஏற்பதில் பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. கூட்டணிக்காக தேமுதிகவுடன் எந்த போட்டியும் இல்லை. தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையைத் தான் தேமுதிக ஏற்க வேண்டும் என்பது இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும் காஞ்சிபுரம் மாநாட்டில், தேமுதிக யாருடைய கூட்டணியிலும் இருப்பதாக கூறவில்லை என்றும், பல்வேறு தரப்பினர் அழைப்பதை போல், தாங்களும் தேமுதிகவை அழைப்பதாகவும் முரளிதரராவ் கூறினார்.
இதேபோல் பாஜக தலைமையகமான கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் தேமுதிக -திமுக கூட்டணி வெறும் கற்பனையே என்றும், பலம் பொருந்திய கூட்டணியாக தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications