அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்த பொன்ராஜுக்கு அனுமதி !
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயர், புகைப்படத்தை அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக, அவரின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், அப்துல்கலாம் லட்சியக் இந்தியா என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருந்தார்.

இதனையடுத்து, அப்துல்கலாமின் பெயரில் அரசியல் கட்சி தொடங்க தடை விதிக்க வேண்டும் என கோரி கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மறைக்காயர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்துல் கலாம் பெயரை அரசியல் கட்சிக்கு பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில், பொன்ராஜ் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு கடந்த ஜூலை 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் முதன்மை செயலாளர் வரிந்தர் குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேசிய தலைவர்கள் பெயரை அரசியல் கட்சிக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியாது என்றும், தேசிய தலைவர்களை தனி நபர்கள் உரிமை கோர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், அப்துல் கலாமின் பெயர், புகைப்படத்தை அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.
-
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி!












Click it and Unblock the Notifications