அதிமுக கட்சியையும், ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.. கே.சி.வீரமணி
திருப்பத்தூர்: தமிழகத்தில் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக கட்சியின் மாவட்ட,நகரம்,ஒன்றியம் உள்ளிட்ட பொறுப்புகள் புதிதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பொறுப்பாளர்களின் அறிமுகம் நிகழ்ச்சி கரகாட்டம், புலி ஆட்டம்,சிலம்பாட்டத்துடன் கோலாகலமாக நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு கட்சியின் கொடியேற்றி எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ் மற்றும் வெள்ளையன்,நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் சாம்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோரை தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அப்போது பேசிய அமைச்சர் கே. சி.வீரமணி கடந்த 1972ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுக இயக்கத்தை தொடங்கிய போது 100 நாட்கள் 200 நாட்கள் கூட இருக்காது என ஏளனம் பேசியவர்களின் மத்தியில் இன்று 50 வருடங்களாக நிலைத்து நின்று சிறப்பான ஆட்சியையும் கட்டுக்கோப்பாக கட்சியும் அம்மாவிற்கு பிறகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வழி நடத்தி வருகின்றனர்.
எனவே அம்மா அடிக்கடி சொன்னதை போல் 100 வருடங்கள் இந்த கட்சியும் ஆட்சியும் இருக்கும் என்ற சொல்லிற்கு ஏற்ப, இன்னும் பல நூறு ஆண்டுகள் தமிழகத்தில் இருக்கும்.அதிமுக கட்சியையும் ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. தொண்டர்களின் முழு ஒத்துழைப்பு தொடர்ந்து அளிக்க வேண்டும்" இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
-
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம்












Click it and Unblock the Notifications