யாருமே என் மகளுக்கு உதவ வரவில்லை.. சுவாதியின் தந்தை வேதனை
சென்னை: என் மகள் சுவாதி மிகவும் இளகிய மனம் படைத்தவள். தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவள் ஆர்வமாக இருந்து வந்தாள். ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய் விட்டது. எனது மகளைக் காப்பாற்ற யாருமே முன்வராமல் போய் விட்டனர் என்று கூறியுள்ளார் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன்.
சந்தான கோபால கிருஷ்ணன் குடும்பம் இன்னும் வேதனையிலிருந்து மீளவில்லை. சுவாதியை இழந்த வேதனையை விட தங்களது குழந்தையைக் காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என்பதுதான் அவர்களை நிலை குலைய வைத்துள்ளது.
அவரது தந்தை தனது 24 வயது மகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது மகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வேடிக்கை பார்த்துள்ளனர்
எனது மகளை தாக்கிய நபரை யாருமே தடுக்க முன்வரவில்லை. மாறாக அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் நாங்கள் எங்களது மகளை இழந்து தவிக்கிறோம்.

இளகிய மனம் படைத்தவள்
எனது மகள் மிகவும் இளகிய மனம் படைத்தவள். யாரிடமும் அதிர்ந்து கூட பேச மாட்டாள். யாராவது ஏதாவது சொன்னால் கூட வீட்டுக்கு வந்து எங்களிடம்தான் அழுவாள்.

உறுப்பு தானம் செய்ய ஆசைப்பட்டார்
தனது உடல் உறுப்புகளை தானமாக தர ஆர்வமாக இருந்து வந்தாள். அதுகுறித்து பேசியபடி இருப்பாள். ஆனால் இன்று அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. அப்படி இருந்திருந்தால் கூட அவளை அந்த உறுப்பு தானம் மூலமாக பார்த்து திருப்தி அடைந்திருப்போம்.

தவிர்த்திருக்கலாம்
யாராவது அந்தக் கொலைகாரனை தடுக்க முயற்சித்திருந்தால் அல்லது அவனை நோக்கிப் பாய்ந்திருந்தால் நிச்சயம் எனது மகளைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ யாருமே உதவ முன்வராமல் போய் விட்டனர். இது ஒரு வகையில் சுய நலம்தான். யாருக்கோ என்ற எண்ணம். ஆனால் நிச்சயம் நாங்கள் அப்படி நடந்திருக்க மாட்டோம். எங்களது மகளுக்கு யாருமே உதவ முன்வராமல் போய் விட்டனரே.

நம்பிக்கை உள்ளது
கொலையாளியை நிச்சயம் பிடித்து விடுவோம் என்று போலீஸார் உறுதி அளித்துள்ளனர். நாங்கள் காவல்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு சரியாக இல்லை என்பதும் எனது மகளின் துயர முடிவுக்குக் காரணம். அதை நான் மறுக்க மாட்டேன். சம்பவம் நடந்தபோது அங்கு போதிய அளவில் காவல்துறையினர் இல்லை என்றார் சந்தான கோபாலகிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications