விஷாலுக்கு பிக்பாஸ் ஆதரவு தருகிறார்?... விரைவில் அறிவிப்பு Exclusive
விஷாலுக்கும் கமலுக்கும் இடையே எவ்வித கருத்து மோதலும் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: விஷாலுக்கும் கமலுக்கும் இடையே எவ்வித கருத்து மோதலும் இல்லை என்றும் இன்னும் ஓரிரு நாள்களில் கமல்ஹாசனே விஷாலை வெளிப்படையாக ஆதரிப்பார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரது டுவிட்டர் பதிவுகளிலும் அரசியல் வாடை இருந்தது. எப்போதும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி டுவீட்டுகளை போட்ட வண்ணம் இருந்தார் கமல்.

முக்கிய பதவி
கமலும் விஷாலும் இணக்கமாகவே இருந்து வந்தனர். அதன் அடையாளமாக நடிகர் சங்க அறங்காவலர் குழுவில் கமலுக்கு கௌரவ பொறுப்பு கொடுத்தார் விஷால். கமலின் அரசியல் கட்சிக்கு விஷால் ஆதரவளிப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. அரசியலில் ஆழம் பார்ப்பதற்காக முதலில் விஷாலை களமிறக்க கமல் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வந்தது.

விஷால் அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து இறங்குவதாக விஷால் நேற்று அறிவித்தார். கமலுடன் ஏற்பட்ட பிரச்சினையால் விஷால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டது. கமல் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்க வேண்டிய காட்சிகளில் கமல் நடித்துக் கொடுக்காததால் தயாரிப்பாளர்கள் விஷாலை அணுகினர்.

இதுதான் காரணமா
கமல்ஹாசனின் இந்தியன் 2 அறிவிப்பை பார்த்தவுடன் மேற்கண்ட இரு படங்களை முடித்து கொடுக்குமாறு கமலிடம் விஷால் கோரிக்கை வைத்தார். இதனால் இருவருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதாக பேச்சு அடிபடுகிறது.

கமல் ஆதரவுடன் விஷால்
கமல்ஹாசனுக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது. இது முழுவதும் பொலிட்டிக்கல் ஸ்டண்ட் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாள்களில் நடிகர் கமல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு தருவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எது எப்படியோ விஷாலை வைத்து கமல் ஆழம் பார்ப்பதாகவே காணப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications