நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை… நிர்மலாதேவி வழக்கே சாட்சி… உதயநிதி பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதற்கு நிர்மலாதேவி வழக்கே சாட்சி என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

No safety for womens in this country... Udhayanidhi Stalin campaign

அந்த வகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கெளதம சிகாமணியை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக-வின் தேர்தல் அறிக்கையை பார்த்து எதிர்க்கட்சிகள் பயந்துபோய் உள்ளதாக கூறினார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி இல்லை; மோசடி கூட்டணி என்று விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின், மோடியை வீட்டுக்கு அனுப்பி விட்டு திமுக கூட்டணி சார்பில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்றார்.

மேலும், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கே சாட்சி என்றும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாகவும், இதனை பகிரங்கமாக கூறுவதால் முடிந்தால் தன் மீது வழக்கு போட்டு பாருங்கள் எனவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+