ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவை கேட்கவில்லை: தேமுதிகவிற்கு அழைப்பு- கருணாநிதி

சென்னை அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி: உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையைக் குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: தூக்குத் தண்டனை கூடாவே கூடாது என்று இன்று நேற்றல்ல ; நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே சிக்கி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனு தாக்கல் செய்துள்ள நிலையில் சிறையிலே இருக்கும் மூன்று பேருக்கும் இந்த தண்டனை பொருந்துமா?
கருணாநிதி: அவர்களுக்கும் இந்தத் தண்டனை பொருந்தும் வகையில் முடிவு வெளிவந்தால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
கேள்வி: மு.க. ஸ்டாலின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி, சொத்துக் குவிப்பு வழக்கிலே சிக்கியுள்ள அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தார். அதுபற்றி உங்கள் கருத்து?
கருணாநிதி: பொதுவாக மக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.
கேள்வி: ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க வேட்பாளர் திருச்சி சிவாவுக்கு நீங்கள் எந்தெந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்கப் போகிறீர்கள்? காங்கிரஸ் கட்சியிடம் கேட்கின்ற உத்தேசம் இருக்கிறதா?
கருணாநிதி: இல்லை.
கேள்வி: தே.மு.தி.கவிடம் ஆதரவு கேட்கப்படுமா?
கருணாநிதி: பொறுத்திருந்து பாருங்கள்.
கேள்வி: ராஜ்யசபா எம்பி பதவியை தே.மு.தி.கவுக்கு திமுக விட்டுக் கொடுத்தால், நாடாளுமன்றத் இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாக வாய்ப்பாக இருக்குமென்று கருத்து சொல்லப்படுகிறதே?
கருணாநிதி: விஜயகாந்த் தலைமையிலே உள்ள தே.மு.தி.கவிற்கும், தி.முகவுக்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அப்போது நீங்கள் தெரிவித்த கருத்தும் பரிசீலிக்கப்படும்.
கேள்வி: மனித நேய மக்கள் கட்சி சார்பிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் விஜயகாந்தைச் சந்தித்து, தே.மு.தி.க. இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்களே?
கருணாநிதி: அவர்களுடைய நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.
கேள்வி: தே.மு.தி.கவிற்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்கலாமே?
கருணாநிதி: எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித்திருக்கிறோம்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications