Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூழை கும்பிடு போட்டவங்க யாரையும் ஜெயில் பக்கமே காணோம்.. கொசுக் கடி வேறு.. சங்கடத்தில் சசிகலா!

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை பார்வையிடுவதை கட்சியினர் தவிர்த்து வருவதால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக சிறை துறையினர் தெரிவித்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பார்வையிடுவதை கட்சியினர் தவிர்த்து வருவதால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ள அவர் யாருடனும் பேசாமல் சிறையினுள்ளேயே அடைந்து கிடக்கிறாராம்.

தமிழகத்தில் உள்ள டிரென்டுக்கு ஏற்ப அம்மா மறைந்தவுடன் சின்னம்மா... சின்னம்மா.. என்று கட்சியினர் விம்மி விம்மி அழைத்தனர். "காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை சின்னம்மா" எனும் அளவுக்கு பாசத்தை பொழிந்து வந்தனர்.

அக்கா மறைந்த துக்கத்தில் இருந்த சசிகலாவிடம் கட்சிக்கு தலைமையேற்க அழைத்தனர். எனினும் வேண்டாம் என்று கடுந்துக்கத்தில் இருந்த அவரின் தலை மேல் நிர்வாகிகள் வலுகட்டாயமாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெரிய சுமையை வைத்தனர் (!).

இதற்குத்தான் ஆசைப்பட்டேன்...

இதற்குத்தான் ஆசைப்பட்டேன்...

இதுதான் தாமதம், கொண்டை முதல் நடை, உடை , பாவனை அனைத்தையும் மாற்றி டூப்ளிகேட் ஜெயலலிதா போல் மாறிவிட்டார் சசிகலா. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசாததுதான் பாக்கி (தெரியாதுல்ல). இதனால் ஜெயலலிதா இருந்த போது என்ன மரியாதையை கொடுத்தார்களோ அதை விட அதிகமான மரியாதையை நிர்வாகிகள் அவருக்கு வழங்கினர்.

கூழை கும்பிடு

கூழை கும்பிடு

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கிணங்க அமைச்சர்களும், நிர்வாகிகளும் அதே கூழை கும்பிடு போட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் கம்பீரமாக வலம் வந்தார் சசிகலா.

ஆசை... ஆசை...

ஆசை... ஆசை...

இதைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட்டதால் உள்ளதும் போயிற்று என்பது போல் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு உறுதியானதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை செல்ல நேரிட்டது. இதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு தமிழகத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை பார்க்க வந்த வண்ணம் இருந்ததால், ஒரு கைதியை பார்வையாளர்கள் இத்தனை முறைதான் சந்திக்க வேண்டும் என்ற விதிமுறை சசிகலா விஷயத்தில் தகர்தெறியப்பட்டது. இதனால் கர்நாடக போலீஸார் திணறினர்.

ஈ... காக்கா... இல்லை

ஈ... காக்கா... இல்லை

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து, மகாதேவன் மரணம், இளவரசிக்கு உடல்நலமின்மை, திகாரில் தினகரன் உள்ளிட்ட பிரச்சினைகளால் மன வருத்தத்தில் சசிகலா உள்ளார். மேலும் தன்னை பார்க்க வந்து சென்ற ஒரு சிலரும் தற்போது வராததால் மனம் நொந்து இருக்கிறாராம்.

மௌன காக்கும்...

மௌன காக்கும்...

விரக்தியில் உள்ள சசிகலா சிறையில் யாருடனும் பேசுவது இல்லையாம். நீண்ட காலமாக பழகிய நடைப்பயிற்சியையும் கடந்த சில தினங்கள் மேற்கொள்வதில்லையாம். தற்போது இளவரசியும் மருத்துவமனையில் உள்ளதால் சிறையில் தனியாக உள்ளார் சசிகலா.

கொசுத் தொல்லை தாங்க முடியலை

கொசுத் தொல்லை தாங்க முடியலை

மேலம் கொசுக் கடி அதிகமாக இருப்பதாக சிறைத் துறையிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் அவரது செல்லை சுற்றியுள்ள ஜன்னல்கள், கதவுக்கு கொசு வலை போடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தமிழ் செய்தித்தாள்களை வாசித்தும், டிவியில் படங்களை பார்த்தும் காலத்தை கடத்துகிறாராம். சிறையில் உள்ள சசிகலாவிடம் நிறைய மாற்றங்கள் உள்ளதாக சிறைத் துறையினர் தெரிவித்தனர்.

லேசுபட்டவங்களா...

லேசுபட்டவங்களா...

ஜெயலலிதா இருந்தவரை அம்மா... அம்மா... என்று கூறிய வாய் சின்னம்மா .... சின்னம்மா என்று கூறியது. தற்போது சின்னம்மாவும் சிறைக்கு சென்றுவிட்டதால் தினகரனுக்கு கட்டுப்பட்டனர். அவரும் சிறைக்கு சென்றுவிட்டதால் யாரை அனுசரித்தால் தங்கள் பதவி நிலைக்குமோ அவர்களை அனுசரித்து வருகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

கடைக் கோடியில் இருந்தவர்களை உலகுக்கே அறிமுகப்படுத்தி, உரிய கௌரவத்தை கொடுத்த ஜெயலலிதாவையே அவர் இருக்கும் வரை கொண்டாடி இறந்தவுடன் மறந்த அதிமுக நிர்வாகிகளுக்கு சின்னம்மாவெல்லாம் எந்த மூலைக்கு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+