சென்னை சில்க்ஸ் தீ விபத்தை நேரில் பார்க்க யாரும் வராதீங்க... கலெக்டர் வேண்டுகோள்
தீ விபத்து ஏற்பட்டுள்ள தி.நகர் சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தீ விபத்து நிகழ்ந்த தி. நகர் சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

" சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள தி.நகர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம். அதிக கூட்டம் கூடுவது தீயணைப்பு பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதிகாலை முதலே தீ பற்றி எரிவதால் புகைமூட்டம் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். தரைத்தளத்தில் தீவிபத்து நிகழ்ந்துள்ளதால் மேல் தளங்களுக்கும் தீ பரவியுள்ளது. கடையில் 7 வது தளத்தில் இருந்து இதுவரை 14 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் இல்லை.
சென்னை சில்க்ஸ் கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள மற்ற கடைகள் எதையும் திறக்கவேண்டாம். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைய வேண்டாம். அனைவரின் வாகனங்களையும் சாலையில் நிறுத்தாமல் வேறு பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்துங்கள்.
தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இதுவரை கண்டறிய முடியவில்லை. முதலில் தீயை அணைக்கும் பணியை முடித்துவிட்டு விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடிவு செய்துள்ளோம்." என்று தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications