இன்றுடன் ஓய்கிறது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே இறுதி நாளாகும். அத்தொகுதியில் வருகிற 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க., பா.ம.க., த.மா.கா., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க.ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புறக்கணித்து விட்டன.
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய கடந்த 3 ஆம் தேதி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 13 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனு வாபஸ் பெறலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வருகிற 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 30 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications