வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்- மே 2ல் இறுதி வாக்காளர் பட்டியல்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நேற்று அதிமுக வேட்பாளர்கள் 233 பேரும் பிற்பகல் 1 மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மே 2ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 29) முடிவடைகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாள்களில் சேர்த்து 861 பேரும், மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை 191 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

புதன்கிழமை வரையில் மொத்தமாக 2 ஆயிரத்து 112 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். நேற்றைய தினம் அதிமுகவைச் சேர்ந்த 233 வேட்பாளர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஏப்30ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான மே2ஆம் தேதியே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் நடைபெறும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications