ஆர்.கே.நகரில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது- 4 சுயேட்சைகள் மனுத்தாக்கல்!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
சென்னை: தமிழகம் மிகவும் எதிர்பார்க்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் இதுவரை 4 சுயேட்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஓராண்டு கழித்து நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4-ந் தேதியாகும்.

டி. 7 கடைசிநாள்
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7-ந் தேதியாகும்.

டிச 24-ல் வாக்கு எண்ணிக்கை
டிசம்பர் 21-ந் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலையொட்டி ஆர்.கே.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீவிர வாகன சோதனை
முன்னெப்போதும் இல்லாத வகையில் இரவு நேரத்தில் வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் வாகன் சோதனைகளும் தீவிரமடைந்துள்ளன.

4 சுயேட்சைகள் மனுத் தாக்கல்
இன்று இதுவரை 4 சுயேட்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுசாமியிடம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications