இறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள்.. டிவிட்டரில் வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்!
சென்னை: இறைச்சிக்கு எதிராக டிவிட்டரில் வகை வகையான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானோருக்கு நான் வெஜ் நாள்தான். வாரத்தில் 6 நாட்கள் பிஸியாக வேலை பார்த்துவிட்டு கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் இறைச்சி சமைத்து குடும்பத்தோடு அமர்ந்து ஒரு வெட்டு வெட்டுவதை பெரும்பாலான மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காலையிலேயே டிவிட்டரில் இறைச்சிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. அதன்படி #NonVegetarians_Are_Killers, #Saint Rampal Ji Maharaj, #Stop Eating Meat ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரென்ட்டிங்கில் உள்ளன.

இறைச்சியை தவிருங்கள்
சாமியார் ராம்பால் ஜி மகரா4 என்பவர் தனியார் தொலைக்காட்சியில் பிரசங்கம் செய்த போது இறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள், விலங்குகளை கொன்று உண்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றார். ஆகையால் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
|
கடவுள் சொல்லவில்லை
இந்நிலையில் அவரது வார்த்தைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகின்றன. விலங்குகளை கொன்று உண்பதை நிறுத்துங்கள். எல்லா உயிரினங்களும் அவரவர் தேசத்தில் கடவுளால் படைக்கப்பட்டவை. இறைச்சி உண்ண வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படியிருக்கையில் கடவுளின் உத்தரவை ஏன் பின்பற்றுவதில்லை என கேட்டிருக்கிறார் இவர்.
|
பிசாசுகள்
சைவமாக இருங்கள்!
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள்!
சைவ உணவு உண்பவர்கள் நல்ல நபர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்..
இறைச்சி சாப்பிடுபவர்கள் பிசாசுகளாக கருதப்படுகிறார்கள் என்று கூறுகிறார் இவர்.
|
மனிதர்கள் சாப்பிட
மனிதர்கள் சாப்பிடுவதற்கு கடவுள் நமக்கு பலனளிக்கும் மரங்களையும், மரக்கன்றுகளையும் கொடுத்திருக்கிறார், கடவுள் இறைச்சியை உண்ண உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ளார்.
|
நரகத்தை அடைகிறார்கள்
இறைச்சி சாப்பிடுவதற்கான நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து இந்து மற்றும் முஸ்லீமை உச்ச கடவுள் கபீர் கண்டிக்கிறார். இறைச்சி சாப்பிடும் கொலையாளிகள் நரகத்தை அடைகிறார்கள் எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள் என பதிவிட்டிருக்கிறார் இவர்.

விளம்பரமா?
இன்று இரவு 7.30 மணிக்கு சாதனா என்ற தொலைக்காட்சியில் சாமியார் ராம்பால் ஜி மகராஜின் இறைச்சிக்கு எதிரான பிரசங்கத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்றும் இந்த ஹேஷ்டேக்குகள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications