‛கபி.. கபி’.. மயிலாடுதுறையில் நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்.. ஏக்கருக்கு ரூ.4,000 மிச்சம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தால் ஏற்பட்ட ஆள்பற்றாக்குறையை சமாளிக்க நெல் நாற்று நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கும் இவர்கள் மாலை வரை பணி செய்வதால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை கூலி மிச்சமாகிறது. இதனால் விவசாய பணிக்கான வடமாநில தொழிலாளர்களுக்கு ‛டிமாண்ட்' அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஒடிசா, உத்த பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தோடு தமிழகம் வந்து பல்வேறு இடங்களில் தங்கி பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக கட்டுமான பணி, ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பண்ணை தொழில், பானிபூரி விற்பனை உள்ளிட்ட பணிகளை வடமாநில தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கடந்த 2 ஆண்டுகளாக விவசாய பணிகளிலும் கூட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் நலத்துக்குடி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரை சேர்ந்த மக்கள் 100 நாள் வேலைக்கு செல்வதால் விவசாய பணிக்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கி பணியை தொடங்கும் வடமாநில தொழிலாளர்கள் மாலை வரை பணி செய்கின்றனர்.
மேலும் குறைந்த கூலியில் வயல் உரிமையாளர் சொல்வது போல் நாற்றை நடவு செய்கின்றனர். மேலும் வெயிலில் களைப்பு தெரியாமல் இருக்க வடமாநில தொழிலாளர்கள் ஹிந்தி பாடல்களை பாடியபடி நாற்று நடவு செய்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கான வடமாநில தொழிலாளர்களுக்கு ‛டிமாண்ட்' அதிகரித்துள்ளது. இதுபற்றி நெலத்துகுடி கிராமத்தை சேர்ந்த கவி என்பவர் கூறியதாவது: எனக்கு 9 ஏக்கர் நிலம் உள்ளது. நான் உள்ளூர் ஆட்களை வைத்து மெஷின் நடவு அல்லது கை நடவு தான் செய்து வந்தேன். ஆனால் அவர்கள் நடவு செய்யும்போது எலி பிரச்சனை வருகிறது.
ஆனால் வடமாநில தொழிலாளர்கள் சொன்னபடி நெல் நடவு செய்கின்றனர். உள்ளூர் மக்களை நடவு பணிக்கு ஈடுபடுத்தும்போது ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் முதல் 8 ஆயிரத்துக்கு 500 வரை செலவு ஆகிறது. ஆனால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்களை பயன்படுத்தும்போதும் ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை மிச்சமாகிறது. காலை 6 மணிக்கு பணியை தொடங்கும் வடமாநில தொழிலாளர்கள் மாலை வரை வேலை செய்கின்றனர். ஒரு நாளுக்கு 4 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர். 2 நாட்களில் 8 ஏக்கர் நடவு செய்து விடுகின்றனர்.
சாப்பாட்டுக்கு நாம் அரிசி வாங்கி கொடுத்துவிட்டால் அவர்களே சமைத்து சாப்பிட்டு விட்டு பணி செய்கின்றனர். டீ செலவுக்கு மட்டும் நாம் பார்த்து கொள்ள வேண்டும். வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விவசாய பணிகளுக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் இருப்பது தான். 100 நாள் வேலைக்கு உள்ளூர் மக்கள் செல்வதால் நடவு பணிக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் நாம் சொல்லும் நேரத்துக்கு நடவு பணிக்கு அவர்களால் வர முடியவில்லை. இதனை சமாளிக்க தான் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்துகிறோம்'' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications