ஈரோட்டில் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் செய்த செயல்.. பொதுமக்கள் தாக்கியதில் பலி!
ஈரோடு: ஈரோட்டில் கஞ்சா போதையில் முதியவரை கொல்ல முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் சூழ்ந்து கடுமையாகத் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வட மாநில இளைஞர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடிருப்பில் வசித்து வரும் முதிய தம்பதியர் சுப்பிரமணியம் - ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வட மாநில இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில், முதியவர் சுப்பிரமணியத்தை தாக்கி உள்ளார். மேலும் அவரது கழுத்தை அறுத்து கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞரை கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் அந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த வட மாநில இளைஞர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications