இருக்கை வேண்டி 150 வடமாநிலத்தவர்கள் மறியல்: நெல்லை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தம்
மதுரை: முன்பதிவு பெட்டியில் இருக்கை வேண்டி வட மாநிலத்தைச் சேர்ந்த 150 பேர் திடீர் மறியலில் ஈடுபட்டதால் நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரை அருகே நடுவழியில் நிறுத்தப் பட்டது.
நேற்று நடைபெற்ற ரயில்வே வாரியத் தேர்வில் பங்கெடுப்பதற்காக மதுரை வந்த வடமாநிலத்தவர்கள் சுமார் 150 பேர் நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்தனர். அதன்படி, நேற்றிரவு மதுரை ரயில் நிலையத்துக்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸின் குளிர்சாதனப் பெட்டிகளில் அவர்கள் ஏறியுள்ளனர். 150 வடமாநிலத்தார் ஏறியதால், அப்பெட்டியில் ஏற்கனவே பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பொது பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்து விட்டு முன்பதிவு பெட்டியில் அவர்கள் பயணம் செய்வது குறித்து ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார் அளித்தனர் பயணிகள். பின்னர், உடனடியாக சோழவந்தான் அருகே ரயில் நிறுத்தப் பட்டது.
அத்துமீறி பயணம் செய்த வடமாநிலத்தவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், குளிர்சாதன பெட்டிகளின் கண்ணாடிகளை உடைக்கத் துவங்கியதோடு, தாங்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் பொதுப்பெட்டி வேண்டி அதிரடியாக மறியலிலும் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பிரச்சினையால் ரயிலில் பயணம் செய்த மற்றப் பயணிகள் அச்சத்திற்கும், அவதிக்கும் உள்ளானார்கள். இதனால், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து செல்ல வேண்டிய செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடல்நகர் ரயில் நிலைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
பின்னர், மதுரை-திண்டுக்கல் இடையே இரட்டை ரயில்பாதை உள்ளதால் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சோழவந்தான் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அதே நேரத்தில் மற்ற ரயில்கள் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டன.
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்த்குமார்சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பெட்டிகளை கூடுதலாக இணைத்து வடமாநில இளைஞர்களின் பயணத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக அதாவது 11.45 மணிக்கு சோழவந்தானிலிருந்து புறப்பட்டது. அதன் பின்னர், நள்ளிரவு மதுரை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோழவந்தானுக்கு வந்தது. பின்னர், அதில் வடமாநில இளைஞர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications