வலுப்பெறுகிறது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் அடித்து ஆட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மத்தியப்பிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வருகிறது.
தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

வெப்பசலனத்தால் மழை
இதனால் வால்பாறை தாலுக்காவில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது திடீர் மழை பெய்து வருகிறது.

சென்னையில் பரவலாக மழை
சென்னையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

13ஆம் தேதி வலுப்பெறும்
இந்நிலையில், வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா கடல் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடதமிழகத்தில் கனமழை
இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications