தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை: இன்று பல இடங்களில் மழை பெய்யும்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,

நாடு முழுவதும் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இந்த தகவலை வானிலை இலாகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகத்தின் வடக்கு மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. மேலும் இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்யும். இது தவிர உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என்றார்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications