ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி பெறவில்லை… அமைச்சர் கருப்பண்ணன் குற்றச்சாட்டு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் இருந்து எந்தவித அனுமதியையும் மத்திய அரசு பெற வில்லை என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் நெடுவாசல் கிராமத்தின் நீர் வளம் குன்றி பாலைவனமாக மாறிவிடும் என்று அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது. இதனையடுத்து, நெடுவாசல் மக்கள் 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெறவில்லை என்று தமிழக சுற்றுசூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து அனுமதி பெறாமலேயே திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்த போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications