தாமரை வீடு திரும்பியதில் மகிழ்ச்சி; இணைந்து வாழும் எண்ணம் இல்லை: தியாகு
சென்னை: போராட்டத்தைக் கைவிட்டு மகனுடன் தாமரை வீடு திரும்பியதில் மகிழ்ச்சி, ஆனால் தாமரையுடன் இனியும் இணைந்து வாழும் எண்ணம் இல்லை என்று தியாகு கூறியுள்ளார்.
தனது கணவரும், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகு கடந்த நவம்பர் மாதம் 23-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறி கவிஞர் தாமரை, பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் தியாகுவின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

தனது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால் கணவர் தியாகு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவிஞர் தாமரை தெரிவித்தார்.
தியாகு மன்னிப்பு
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இரவு 9 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாமரையை தியாகு சந்தித்தார். அவரிடமும் மகன் சமரனிடமும் மன்னிப்புக்கோரி கடிதம் ஒன்றை கொடுத்தார். இதைத் தொடர்ந்து தனது தர்ணா போராட்டத்தை முடித் துக்கொண்டு தாமரை வீடு திரும்பினார்.
இணையமாட்டேன்
இதனிடையே இருவரும் இணைந்து வாழப்போகிறீர்களா?என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு கருத்து தெரிவித்த தியாகு, என் வருத்தத்தை ஏற்றுக் கொண்டு இருவரும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி. இப்போது வேளச்சேரியில் மகள் வீட்டில் இருக்கிறேன். ஆனால், இனியும் தாமரையுடன் இணைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications