ஸ்ஸ்ஸ் அப்பா முடியல... இன்னும் எதை எல்லாம் பார்க்கணுமோ? பயந்து வருது!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்தாலும் ஒரு கமெண்ட். ஜாமீன் கிடைத்தாலும் ஒரு கமெண்ட். அட வழக்கில் இருந்து விடுதலையானாலும் எதையாவது கமெண்ட் போட்டு கலந்து கட்டி அடிக்க ஆட்கள் தயாராக இருக்கின்றனர்.
ஜெயலலிதா குற்றவாளி என்று அன்று தீர்ப்பு கூறி தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹாவை அடித்து ஆட ஒரு கூட்டம் இருந்தது என்றால், ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு சொல்லி அவரை விடுவித்த நீதிபதி குமாரசாமியை வண்டி வண்டியாய் வசைபாடுகின்றனர் எதிர்தரப்பினர்.
அட அதெல்லாம் விடுங்க பாஸ் தீர்ப்பு வரும் முன்னதாகவே ஒரு நாளிதழ் ஜெயலலிதா விடுதலை என்று செய்தி போட்டு புண்ணியம் கட்டிக்கொண்டது என்றால் ஜெயலலிதாவின் சிம்மராசிக்கு சரியான பலன் போட்டுள்ளது ஒரு காலண்டர்.

ராசிபலன் சொன்னது என்ன?
தினசரி ராசிபலனில், சிம்மராசிக்கு நல்ல பலன் சொல்லப்பட்டுள்ளது. குடும்பதாரரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள், அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்று கூறுகிறது அந்த ராசிபலன். அதுபோலவே ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார் என்று பகிர்கின்றனர் பலரும்.
|
யு.பி.எஸ் … ஒ.பி.எஸ்
அம்மா வந்தாச்சு... பவர் வந்தாச்சு இனி யு.பி.எஸ் வேண்டாம் ஓ.பி.எஸ்சும் வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு குசும்பர்.
|
அது ஆனந்த கண்ணீருப்பா
ஜெயலலிதா கைதாகி சிறைக்கு சென்ற போது மழை பெய்தது. அப்போது வானம் கண்ணீர் விட்டு அழுதது என்று பதிவிட்ட புண்ணியவான்கள், நேற்றைய தினம் ஜெயலலிதா விடுதலை என்று தீர்ப்பளித்த உடன் வானம் ஆனந்த கண்ணீர் வடிப்பதாக பதிவிட்டுள்ளனர்.
|
சேல்ஸ் எகிறுதுப்பா
அம்மா ஜெயிலுக்கு போனாலும் டாஸ்மாக் சேல்ஸ் எகிறுது, ரிலீஸ் ஆனாலும் சேல்ஸ் எகிறுது! அம்மாவால் மொத்ததுல அரசுக்கு நல்ல வருமானம்தான்! என் தன்பங்கிற்கு பதிவிட்டுள்ளார் ஒரு பதிவர்.
|
கணக்கு முக்கியம் நீதிபதியாரே!
இது ஒருபுறம் இருக்க நீதிபதி குமாரசாமி சொன்ன கணக்கே தப்பு... அவருக்கு கணக்கு கூட வரலை செல்லாது செல்லாது என்று டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஸ்ஸ்ஸ் அப்பா முடியல!...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications