"பேன்சி டிரஸ் காம்பெட்டிஷன் வச்சா மோடிக்குத்தான் 'பர்ஸ்ட் பிரைஸ்'!"
சென்னை: பேஸ்புக்கில் இப்போது மோடியின் "டெர்ன்" போல.. அவர் அணிந்து வரும் டிரஸ்களையும், தலைப்பாகைகளையும் வைத்து கிண்டலடித்து வருகின்றனர்.
பேஷன் டிரஸ் காம்பெட்டிஷன் வைத்தால் அதில் மோடிக்குத்தான் முதல் பிரைஸ் என்பதுதான் இந்த கிண்டலின் சாராம்சமாக உள்ளது.
அதேபோல ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் கூட மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறியும் கிண்டல்கள்கள், மெரீனா பீச் சுண்டல் போல படு சூடாக உலா வந்து கொண்டுள்ளது.

பேஸ்புக்கை மட்டும் பகைச்சுக்கப்படாது!
அரசியல்வாதிகள் யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பேஸ்புக்காரர்களை மட்டும் பகைத்துக் கொள்ளவ கூடாது. என்னா மாதிரி கிண்டலடிக்கிறார்கள் தெரியுமா...

விஜயகாந்த்தைக் கேட்டால் தெரியும்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைக் கேட்டால் அதுபற்றி கதை கதையாக கூறுவார். அவரைப் போல பேஸ்புக்கில் கிண்டல் அடிபட்டவர் யாருமே இருக்க முடியாது. இப்போதுதான் சற்று ஓய்ந்துள்ளனர்.

கருணாநிதியையும் விடவில்லையே
திமுக தலைவர் கருணாநிதியையும் கூட பேஸ்புக் கிண்டல்காரர்கள் விடுவதில்லை. அவரது பேஸ்புக்கிலேயே போய் வண்டை வண்டையாக கிண்டலடித்துக் கொண்டுள்ளனர்.

லேட்டஸ்டாக ஸ்டாலின்
லேட்டஸ்டாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் கூட கிண்டலடித்து வருகின்றனர். அவர் விநாயகர் சதுர்த்திக்கு முதலில் வாழ்த்து சொல்லி விட்டு பின்னர் ஜகா வாங்கியதை வைத்து கிண்டலடித்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது மோடி
இந்த வரிசையில் தற்போது மோடியைப் போட்டு வாரிக் கொண்டிருக்கின்றனர். மோடியின் டிரஸ் மற்றும் அவர் பல்வேறு நிகழ்வுகளின்போது அணிந்த விதம் விதமான தலைப்பாகையை வைத்து கிண்டல்கள் தலைவிரித்தாடுகின்றன.

பேன்சி டிரஸ் போட்டி வைத்தால்
அதாவது பேன்சி டிரஸ் போட்டி வைத்தால் அதில் மோடிக்குத்தான் முதலிடம் என்று இந்த கிண்டல்கள் கூறுகின்றன.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்... லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பேஸ்புக்கில் கடுமையான கிண்டல்களுக்கு ஆளான ராகுல் காந்தியிடம் போய்க் கேட்டால் இப்படித்தான் கூறுவாரோ என்னவோ!
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications