சென்னை விமான நிலைய பார்க்கிங் கட்டணம் 60% உயருகிறது: பயணிகள் எதிர்ப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணத்தை 60 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டணம், 2015-ம் ஆண்டில் அமல்படுத்தப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். விமான நிலைய வளாகத்தில் வாகன நிறுத்த கட்டணமாக காருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதுவே உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தின் அருகில் காரை நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிற்கும் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாகன நிறுத்த கட்டணத்தை உயர்த்த, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
60 சதவிகிதம் உயர்வு
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை வாகன நிறுத்த கட்டணம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 60 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான பரிந்துரைகள் வந்துள்ளன. 2015-ம் ஆண்டில் வாகன நிறுத்த புதிய கட்டணம் செயல்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
பயணிகள் எதிர்ப்பு
இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து கூறிய விமான பயணிகள், ‘‘சென்னை விமான நிலையம் பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் இலவச குடிநீர், கழிப்பறை வசதிக்கூட இல்லை.
வசதியில்லையே
வரவேற்க வருபவர்களுக்கு அமர்வதற்கு இடவசதி இல்லை. கால் வலிக்க நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்யாத விமான நிலையம், வாகன நிறுத்த கட்டணத்தை மட்டும் உயர்த்துவது சரியில்லை'' என்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications