சுங்கச் சாவடி தகராறு: நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது

கடந்த 17ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார். அங்கிருந்து இரவு மதுரை திரும்பினார்.
மேலூர் அருகே சிட்டம்பட்டி அருகே சீமானில் கார் வந்த போது சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. சீமானும் அவருடைய ஆதரவாளர்களும் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் தகராறு செய்ததாக மேலூர் போலீசில் சுங்கச் சாவடி ஊழியர் அமீர் புகார் தெரிவித்தார்.
மேலூர் டிஎஸ்.பி மணிரத்னம் தலைமையில் இன்று சென்னை வந்த போலீசார் ஆலப்பாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சீமான் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு ஆயத்தமாக கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த போலீஸ் வேனில் ஏற்ற முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் போலீசார் சீமானை மதுரை கொண்டு சென்றனர். மதுரை நீதிமன்றத்தில் இன்று சீமான் ஆஜர் படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே சீமான் கைது பற்றி கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியினர். சுங்கச்சாவடி தகராறுக்கும் சீமானுக்கு தொடர்பில்லை. மோதல் ஏற்பட்டபோது இருதரப்பினரையும் சீமான் சமாதானம் செய்தார். பின்னர் சுங்கக்கட்டணம் எடுத்துக்கொண்டே பயணம் செய்தோம். இது உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.
சீமான் திடீர் என கைது செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications