அசிங்கமாக திட்டிய அரசு நர்ஸ்... மனமுடைந்த நர்ஸிங் மாணவி தற்கொலை முயற்சி
திருச்சி: அரசு மருத்துவமனை நர்ஸ் ஒருவர் தரக்குறைவாக திட்டியதால், மனமுடைந்த நர்ஸிங் பயிற்சி மாணவி தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி அரசு மருத்துவமனை செவிலியக் கல்லூரியில் சுமார் 534 மாணவிகள் தங்கி நர்ஸிங் படித்து வருகிறார்கள். இங்கு பயிலும் மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி வகுப்பும், ஒரு நாள் நேரடி வகுப்பும் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த வியாழனன்று மாணவிகள் அரசு மருத்துவமனையில் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயிற்சி மாணவி ஒருவரை அரசு மருத்துவமனை நர்ஸ் ஒருவர் தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.
பலரது முன்னிலையில் நர்ஸ் தன்னை தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்த அம்மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக மாணவிகளின் முயற்சியால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அம்மாணவி.
அதனைத் தொடர்ந்து நர்ஸ் திட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவியது. இதையடுத்து மற்ற மாணவிகள், சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி டீன் கார்க்குழலி, கல்லூரி துணைமுதல்வர் அலீம், மருத்துவ சூப்பிரண்டு கனகசுந்தரம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில், நடந்த சம்பவம் குறித்த உண்மையை அறிய விசாரணை கமிட்டி அமைக்கப்படும் என்றும், விசாரணை கமிட்டி அளிக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவிகளிடம் டீன் கார்க்குழலி உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து நர்ஸிங் மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, மாணவிகளின் போராட்டதையொட்டி திருச்சி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications