தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.. துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..?.. அட போங்கப்பா!
சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியதன் பின்னணியில் பரபரப்பு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டார்கள்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று மதியம் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரக்கப் பறக்க நடந்த இந்த அவசர சந்திப்பு, அவர் சுமார் அரை மணி நேரம் நடந்தது.

ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிய நிலையில், அடுத்த அதிரடியாக மாலை 6 மணியளவில், ஆளுநர் மாளிகைக்கு, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கார்களில் வருகை தந்தனர். அப்போது ராமமோகன் ராவும் உடனிருந்தார். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என அப்பல்லோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கலாமா என்றும், துணை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இன்று காலைதான் தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் சீர் குலைந்துவிட்டதாக பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டிய நிலையில், மத்திய அரசிடமிருந்து ஆளுநருக்கு, கொடுக்கப்பட்ட சமிக்ஞைகளை தொடர்ந்து இதுபோன்ற தற்காலிக ஏற்பாடுகளை நோக்கி ஆளுநர் நகர்வுகள் அமைவதாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் காவிரிப் பிரச்சினை குறித்தும், அரசாங்க ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் பேசி தெரிந்து கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிக்கை விட.. அட போங்கப்பா.. என்று சப்பென்றாகி விட்டது அத்தனை பேருக்கும்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட்












Click it and Unblock the Notifications