நாங்க அப்படி சொல்லவே இல்லையே.. “பொதுச்செயலாளர்”..அப்போ கோர்ட்டில் சொன்னது? மீண்டும் ஓபிஎஸ் ‘பல்டி’?
சென்னை : ஓபிஎஸ் தரப்பு, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் ஓபிஎஸ் போட்டியிட தயார் என்று கூறியிருந்த நிலையில், தற்போது பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதாக நான் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது ஓபிஎஸ் தரப்பு. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவந்த ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தேர்தலில் களமிறங்க தயார் எனக் கூறியது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், தாங்கள் அவ்வாறு கூறவில்லை என ஓபிஎஸ் 'பல்டி' அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது வாதங்களை முன்வைத்த ஓபிஎஸ் தரப்பினர், பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி எட்டுவதற்காக அவருக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு என கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் வகுத்த விதிகளை மீறும் வகையில், வேறு யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கான விதிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகத் தான் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பதவிகளில் இருக்கும் நபர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
பொதுச் செயலாளர் பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட ஓபிஎஸ் தயார் என்றும், வழக்கையும் வாபஸ் பெற தயார் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார்.
பொதுச் செயலாளர் : இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுக, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என அதிரடியாக தீர்ப்பளித்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அவர் வகித்த பதவியை வகிக்க வேறு யாருக்கும் தகுதி இல்லை என தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் கூறி வந்த நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, 'பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகளை நீக்கினால் ஓபிஎஸ் போட்டியிட தயார்' எனக் கூறியிருந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஓபிஎஸ் பல்டி : இந்நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து இரட்டை நிலைப்பாடு ஏன் என்ற கேள்விக்கு இன்றைய பிரஸ் மீட்டில் பதில் அளித்த ஓபிஎஸ், "அதிமுகவின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் போன்ற உச்சபட்ச பதவிக்கு தேர்தல் நடத்தினால் அதில் போட்டியிடத் தயார் என்று தான் ஐகோர்ட்டில் தெரிவித்தோம். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோம் என்று நாங்கள் கூறவில்லை. ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்" எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications