சசிகலா, தினகரன் சிறையில்.. இனிமேல் யார் கட்டுப்பாட்டில் அதிமுக?
சென்னை: டிடிவி தினகரன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி நடுவே இணைப்பு பணிகள் இனி துரிதமாக நடைபெறும் வாய்ப்புள்ளது.
சசிகலா, தினகரன் அவரது குடும்பத்தார் அதிமுகவில் இருக்க கூடாது என்பதே ஓ.பன்னீர்செல்வம் டீமின் முதல் டிமாண்ட். சசிகலா பெங்களூர் சிறையிலுள்ள நிலையில், டிடிவி தினகரன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்.

இப்போது பன்னீர்செல்வம் கோஷ்டி கனவு நனவாகிவிட்டது. இனிமேல் உள்குத்து செய்யவோ, முட்டுக்கட்டை போடவோ ஆளில்லை. இனிமேல் ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் தங்களுக்குள் என்ன பதவியை பகிர்ந்துகொள்ளலாம் என்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
அதிமுகவின் கட்டுப்பாட்டை எந்த அணி வைத்திருக்கும் என்பதே இனி கவனிக்கப்பட வேண்டியது.
செவ்வாய்க்கிழமை மாலை நிருபர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்து வருவதாக கூறியிருந்தார். தினகரன் இரவே கைதாக உள்ள தகவலை பன்னீர்செல்வம் அறிந்திருந்ததன் வெளிப்பாடுதான் இந்த பேட்டி என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.
ஏனெனில் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கூட இன்று தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவே கணித்திருந்தனர். டெல்லி கோர்ட்டில் இன்று இந்த வழக்கு சம்மந்தமாக நடந்த வாத பிரதிவாதத்தின்போது தினகரனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வி டெல்லி போலீசாரின் முன்பு வைக்கப்பட்டது.
புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் கைதான நிலையில் ஏன் தினகரனை மட்டும் விட்டு வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுந்ததுமே தினகரன் கைது செய்யப்படுவார் என்பதை பலரும் கணிக்க ஆரம்பித்தனர்.
அதிமுகவுக்கு இப்போது சசிகலா கோஷ்டியினர் விரும்பும் தலைமைகள் இல்லை. எனவே இனிமேல் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணியினர் எடுப்பதுதான் முடிவு. இதைத்தான் பாஜகவும் விரும்புகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி!












Click it and Unblock the Notifications