சென்னையில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்.. கமல்ஹாசன் சந்தித்தார்!
சென்னை வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார்.
Recommended Video

சென்னை: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் ஒடிசா பவன் மாளிகையை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். கடந்த 2012 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் ஒடிசா பவன் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். விழாவில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், 6 தளங்களை கொண்டது. ஒடிசா மாநிலத்தில் இருந்து வரும் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஒடிசாவில் முதலீடு செய்ய அழைப்புவிடுக்கும் வகையில் ஒடிசா முதலீட்டாளர்கள் கூட்டம் சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications
