ஜெ.வுக்காக மீட்புப் பணிகளை நிறுத்தி விட்டு ரோடு போடும் வேலையில் இறங்கிய அதிகாரிகள்!
சென்னை: சென்னை போரூர் 11 அடுக்குமாடிக் குடியிருப்பு சம்பவத்தில் இடிபாடுகளை அகற்றி நடந்து வரும் மீட்புப் பணிகளை நேற்று முதல்வர் ஜெயலலிதா வருகிறார் என்பதற்காக சில மணி நேரம் நிறுத்தி வைத்து விட்டனர்.
இந்தப் பணியை நிறுத்தி விட்டு முதல்வர் வசதியாக வந்து செல்வதற்காக வீடு கட்ட வைத்திருந்த மணலைக் கொட்டி தற்காலிகமாக சாலை அமைத்தல், முதல்வர் வரும் பாதையை சீர்படுத்துதல் என்று ரோடு போடும் வேலையில் இறங்கி விட்டனர் அதிகாரிகள்.
இதன் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. இடையில் மழையும் வந்ததால் இன்னும் தாமதமானது.

மீட்புப் பணி என்றால் என்ன…
ஒரு விபத்து, பேரிடர் என்றால் மீட்புப் பணிதான் அதி முக்கியமானது. ஒரு நிமிடம் தாமதமாக போனால் கூட ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய் விடும் என்பதால் ஒவ்வொரு விநாடியும் முக்கியமானது. எனவேதான் மீட்புப் பணிகளில் அதி வேகம் காட்டுவார்கள்.

ஆனால் இங்கு..
ஆனால் நேற்று சென்னை போரூர் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரத்தில் நேற்று மிக வித்தியாசமான காட்சியைக் காண முடிந்தது.

முதல்வர் வருகையால்
முதல்வர் ஜெயலலிதா நேற்று விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்தார். நேரில் பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள் நிறுத்தம்
முதல்வர் வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் போலீஸாரும் அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்தில் குவிந்தனர். அந்த இடத்தை சரி செய்யும் வேலையில் இறங்கினர்.

மீட்புப் பணி பணியாளர்களை வைத்து
இதற்கு அந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களைக் கொண்டே முதல்வருக்காக சில வசதிகளை ஏற்படுத்தும் வேலையில் இறங்கினர்.

தற்காலிக சாலை
முதலில் அந்த இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த வீடு கட்டப் பயன்படுத்தப்படும் மணலைக் கொட்டி தற்காலிக சாலை போல போடப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் இருந்த மேடு பள்ளங்களை அகற்றி சரி செய்து சீரமைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications