ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு... கோட்டைக்காடு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த கோட்டைக்காடு கிராம மக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோட்டைக்காட்டில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டைக்காடு கிராமத்தில் 1991ம் ஆண்டு மண்ணெய் திட்டம் என்ற பெயரில் ஆழ்துளை எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது. அதில் இருந்து ஒருவிதமான வாயும், எண்ணெய் கசிவும் வெளியேறி வருவதாகவும், அதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுக்கோட்டையில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து நெடுவாசல் மக்கள் கடந்த 16 நாட்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று கோட்டைக்காடு கிராம மக்களும் தங்களது கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் போராட்டத்திற்கு எதிராக 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். போராடும் மக்கள் அதனை நிராகரித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 6வது நாளாக கோட்டைக்காட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து இன்று கோட்டைக்காட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் புதுக்கோட்டை சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications