காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை!
ஒகேனக்கல்: காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமாகியுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 6 ஆவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணை, ஹேரங்கி அணை ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு வாரமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் ஊட்டமலை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து 6 ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications