கடலூர் அருகே பயங்கரம்: வீட்டுமனை பிரச்சனை காரணமாக மூதாட்டி அடித்து கொலை - 2 பேர் படுகாயம்
வீட்டுமனை தகராறு காரணமாக வயதான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கடலூர்: கடலூர் அருகே வீட்டுமனை தகராறு காரணமாக மூதாட்டி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கும் உறவினரான ராமசாமிக்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராமசாமியின் மகன் பச்சையப்பன் 25, ராஜமாணிக்கத்தின் மனைவி ராசாத்தி, மருமகள் தேவி, தேவியின் மகள் தேசா ஆகியோரை உருட்டைக்கட்டையால் தாக்கினார். ஆத்திரம் தீராமல் பச்சையப்பன் வீட்டையும் கொளுத்தினார்.
படுகாயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ராசாத்தி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ராஜமாணிக்கத்தின் குடும்பத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications