For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி ஆபரேசன்... சாலைகளில் ஆறுகளில் கொட்டப்படும் கரன்சிகள்...

வருமானத்திற்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் மீது 200 சதவிகிதம் அளவில் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஏராளமானோர் தங்களின் கை வசம் வைத்திருந்த பணத்தை சாலைகள், ஆறுகள

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு சாமானிய மனிதர்களுக்கு சிறுசிறு கஷ்டங்களை கொடுத்துள்ள நிலையில் கோடிக்கணக்கில் கருப்புப்பணத்தை பதுக்கியவர்களுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக மாறியுள்ளது.

அரசாங்கத்தை வரி கட்டாமல் ஏமாற்றி பாடு பட்டு சேர்த்த பணத்தை எல்லாம் என்ன செய்வது தெரியாமல் முழித்து வருகின்றனர். நகையாக மாற்றலாம் என்று நகைக்கடைக்குப் போனால் அங்கேயும் அரசு கிடுக்கிப் பிடி போட்டுள்ளதால் பணக்காரர்கள் பாடு படு திண்டாட்டமாக மாறிவிட்டது.

Old money Of Rs.500 And Rs.1,000 Found Floating river

கங்கையில் கரன்சி

பணத்தை பதுக்கி வைத்திருந்த பலரும் தங்களிடம் இருக்கும் கருப்புப்பணத்தை பல வழிகளில் வெளியேற்றி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ அருகே மிர்சாபூர் என்ற பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பழைய 1000 ரூபாய் நோட்டுகள் மிதந்தபடி வந்ததாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறினார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள கோட்வாலி காவல் நிலைய அதிகாரிகள் ஆற்றில் மிதந்த கரன்சியை சேகரித்தனர்.

சாலைகளில் நோட்டுக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாலைகளில் மூட்டை மூட்டையாக கரன்சிகள் கொட்டப்பட்டிருந்தாக பூக்காரர் ஒருவர் ஊருக்குள் வந்து தகவல் சொல்ல அதை எடுக்க கூட யாரும் முன்வரவில்லையாம். குப்பைகளிலும் பணத்தை கத்தை கத்தையாக கொட்டி வருகிறார்களாம். ஆனாலும் அரசின் அபராதத்திற்கு அஞ்சி யாரும் அந்த பணத்தை தொடவில்லையாம்.

Old money Of Rs.500 And Rs.1,000 Found Floating river

கிழித்து எரிப்பு

திருப்பூர், கோவை, ஈரோடு, சிவகாசி ஆகிய நகரங்களில் பணப்புழக்கம் அதிகம், தொழிலதிபர்கள் அடுக்கி வைத்திருந்த பணத்தை என்ன செய்வதென்று யோசித்து வங்கியிலும் கட்ட முடியாமல் கீழேயும் கொட்ட முடியாமல் பலரும் கிழித்து எரிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இப்படி எரிக்கும் பணத்தை இல்லாத ஏழைகளுக்காகவது பிரித்து கொடுக்கலாமே என்று ஆதங்கப்படுகின்றனராம் பணத்தை கிழிக்கும் ஏழை தொழிலாளர்கள்.

English summary
Defunct currency notes that came floating down the river.The no longer in use 500 and 1000rupee notes were spotted by people bathing in the river in Uttar Pradesh.The initiative to erode the vast circulation of untaxed or black money has been welcomed by experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X