தொடர் விடுமுறை... ஆம்னி பஸ்களில் "கொள்ளையோ..கொள்ளை".... பதறும் பயணிகள்...
சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் விடப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளிடம் பல மடங்கு கட்டணத்தை ஆம்னி பஸ்கள் வசூலித்து வருவதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
தமிழகத்தில் நவராத்திரி விழாவின் 9வது நாளில் ஆயுத பூஜையும், 10வது நாளில் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக சனி, ஞாயிறுடன் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

தொடர் விடுமுறையால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிவோர் இன்றே சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பஸ், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்களைத்தான் நாடுவது வழக்கம். இந்த வாய்ப்பைத்தான் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் விட்டுவிடுவார்களா?
வழக்கத்தைவிட 2 மடங்கு, 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி பயணிகளை பதைபதைக்க வைத்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு ரூ1,000, ரூ1,200 என கேட்கிற கொடுமையும் நடக்கிறது. திருச்சிக்கே இந்த கட்டணம் என்றால் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கான கட்டணங்கள் ரூ2,000, ரூ2,500 என ப்ளைட் டிக்கெட் ரேஞ்சுக்கு எகத்தாளம் பேசுவதையும் நாம் கேட்க முடிந்தது.
இந்த கொள்ளைக் கட்டணத்தையும் கொடுத்துவிட்டு ஊர் போய்சேர்ந்தால் போதும் என்ற கூட்டம் அலைமோதுகிறது.
ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளையை ஊடகங்கள் வெளிப்படுத்தினாலும் அரசு முறைப்படுத்துவது எப்போது என்பதுதான் தெரியவில்லை!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications