சர்க்கரை பொங்கலோடு முதல் பிறந்தநாள் கொண்டாடும் 'அம்மா உணவகம்'-சப்பாத்தியும் வருது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அம்மா உணவகங்களில் இன்று இலவசமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.

ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் உண்ண வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. சென்னையில் தொடங்கிய இந்த திட்டம் மற்ற மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சென்னை சாந்தோமில் முதல்முதலாக அம்மா உணவகம் திறக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று வீதம் 200 இடங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒரு ரூபாய் இட்லி

ஒரு ரூபாய் இட்லி

ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. மலிவான விலையில் உணவு விற்கப்படுவதால் இந்த உணவகத்திற்கு பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

10 மாநகராட்சிகளில்

10 மாநகராட்சிகளில்

சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 10 மாநகராட்சிகளில் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

9 கோடி இட்லி விற்பனை

9 கோடி இட்லி விற்பனை

அம்மா உணவகம் திறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று வரை சுமார் 9 கோடி இட்லி விற்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்று வரை 8 கோடியே 93 லட்சம் இட்லி விற்றுள்ளது,

ரூ. 26.24 கோடி வருமானம்

ரூ. 26.24 கோடி வருமானம்

ஒரு கோடியே 54 லட்சம் சாம்பார் சாதமும் விற்பனையாகி உள்ளது. அம்மா உணவகம் மூலம் இதுவரை கிடைத்த வருவாய் ரூ.26.24 கோடியாகும்.

பொது மருத்துவமனைகளில்...

பொது மருத்துவமனைகளில்...

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அம்மா உணவகம் இருந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஆய்வு செய்யப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சமீபத்தில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

6 மருத்துவமனைகளில் திறப்பு

6 மருத்துவமனைகளில் திறப்பு

இதையடுத்து சென்னையில் உள்ள மேலும் 6 அரசு மருத்துவமனை வளாகங்களில் உணவகம் வருகிற 21-ந் தேதி திறக்கப்பட உள்ளது. நோயாளிகள் மட்டுமின்றி உறவினர்கள், பார்வையாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும்.

1000 அம்மா உணவகங்கள்

1000 அம்மா உணவகங்கள்

சென்னையில் இது போன்று ஆயிரம் உணவகங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாகும். அதன் அடிப்படையில் மேலும் உணவகங்கள் திறக்க மாநகரங்களில் இடங்களை தேர்வு செய்து வருகிறது.

சப்பாத்தியும் வருது

சப்பாத்தியும் வருது

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் இயங்கும் அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்கும் திட்டம் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அம்மா உணவகங்களில் மாலை நேரங்களில் ரூ. 3-க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும். இதனை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க இருக்கிறார்.

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல்

உணவகம் திறந்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இன்று அனைத்து அம்மா உணவகத்திலும் சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+