Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாவட்ட தேர்தல் அதிகாரிதான் நீதிபதி யாரும் தலையிட முடியாது... பிரவீண்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேட்பு மனு பரிசீலனையின் போது, வேட்பாளர்களின் மனு ஏற்பது அல்லது தள்ளுபடி செய்வதில், மாவட்ட தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானது. தேர்தல் ஆணையம் கூட இதில் தலையிட முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

தமிழகம் மற்றும் புதுச் சேரியில் வேட்புமனு தாக் கல் செய்த 1,359 பேரின் மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடந்தது. இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் குருமூர்த்தி, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த பாமக வேட்பாளர் மணிரத்னம் மற்றும் சுயேச்சை சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த சிலரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பாஜக மற்றும் பாமக வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகள் மீது அக்கட்சியினர், அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

10 பேர் முன்மொழிய வேண்டும்

10 பேர் முன்மொழிய வேண்டும்

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுவை ஒருவர் முன்மொழிந்தால் போதும். ஆனால் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் மனுவை 10 பேர் முன்மொழிய வேண்டும்.

இணைப்புக் கடிதங்கள்

இணைப்புக் கடிதங்கள்

அதேபோன்று, வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு கடிதங்களை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 5ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

வேட்புமனு நிராகரிப்பு

வேட்புமனு நிராகரிப்பு

வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வேட்பு மனுதாக்கல் செய்யும் யாருமே 25 வயதுக்கு குறைவற்றவர்களாகவும், இந்தியாவில் எங்காவது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தண்டனை பெற்ற வேட்பாளர்

தண்டனை பெற்ற வேட்பாளர்

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153 (ஏ), (சாதி மத உணர்வுகளைத்தூண்டி சமுதாயத்தினருக்கிடையே முன்விரோதத்தை ஏற்படுத்திய குற்றம்), 171 (இ) (லஞ்ச குற்றம்), 171 (எப்) (தேர்தலில் ஆள்மாறாட்டம், செல்வாக்கை பயன்படுத்தும் குற்றம்), 376 பலாத்காரம் 376 (ஏ, பி, சி, டி) (செல்வாக்கை பயன்படுத்தி பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ளும் குற்றம்), 498 (ஏ) (பெண்ணை, கணவனோ குடும்பத்தினரோ கொடுமைப்படுத்தும் குற்றம்), 505 (வழிபாட்டு தலங்களில் விரோதம் ஏற்படுத்துவது போல் செயல்படுவது) வன்கொடுமை தடுப்புச்சட்டம், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டம் போதைப்பொருள் தடுப்புச்சட்டம், அன்னியச் செலாவணி சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் குறைந்தபட்ச தண்டனை பெற்றிருந்தாலும், அவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்படாது. மற்ற சட்டங்களின் கீழ் இரண்டு ஆண்டுக்கும் மேலாக தண்டனை விதிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுவும் நிராகரிக்கப்படும்.

அவர்தான் நீதிபதி

அவர்தான் நீதிபதி

பொதுவாக வேட்பு மனு பரிசீலனையின்போது, தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது. அவர் அரசு அதிகாரியாக செயல்படாமல் நீதிபதி போன்று செயல்படுவார்.

யாரும் தலையிட முடியாது

யாரும் தலையிட முடியாது

தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவில், டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூட தலையிட முடியாது. வேட்பு மனு பரிசீலனையின்போது சில ஆதாரங்கள் தெரிவிக்க 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்படும். அந்த அவகாசத்துக்குள் ஆர்.ஓ. கேட்கும் ஆதாரத்தை வேட்பாளர் தாக்கல் செய்துவிட வேண்டும். ஆனால் புதிய தகவல்களை வேட்புமனுவில் சேர்க்க முடியாது.

மாற்று வேட்பாளரின் மனு

மாற்று வேட்பாளரின் மனு

வேட்பாளரின் சாதி விபரங்கள், முன்மொழிந்தவரின் கையெழுத்து போன்றவற்றில் சந்தேகம் எழுந்தால், ஆர்.ஓ.வுக்கு திருப்தி வரும்வரை அந்த வகையில் சரிபார்க்கப்படும்.முக்கிய வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டால், அவருக்கான மாற்று வேட்பாளரின் மனு தானாக தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். அதுபோல் ஒரு வேட்பாளருக்காக பல வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் ஒன்று மட்டும் ஏற்கப்படும்.

வேட்பாளர்களின் செலவு

வேட்பாளர்களின் செலவு

வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் தேர்தல் பிரசாரங்களை, தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கு வரும் வாகனங்கள் ஒவ்வொன்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சொந்தமாக காரில் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டால் அது வேட்பாளர்களின் செலவு கணக்கில் வராது. ஆனால் வாடகை பஸ், கார்கள் கண்காணிக்கப்பட்டு, அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

 வெற்றி வாய்ப்பு பறிபோகும்

வெற்றி வாய்ப்பு பறிபோகும்

அந்த வாகனங் களில் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்துக்காக ஆட்களை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டால், அந்த பஸ்சின் வாடகை, ஆட்களுக்கு ஏதாவது பணம் வழங்கியது தெரியவந்தாலோ அவை அனைத்தும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். ஒரு வேட்பாளர் அதிகப்பட்சமாக ரூ.70 லட்சம் தேர்தல் செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்தால் அவரது வெற்றிவாய்ப்பு கூட பறிபோகும் அபாயம் உள்ளது. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

மனுக்கள் வாபஸ்

மனுக்கள் வாபஸ்

9ம் தேதி காலை 11 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அதற்கு வேட்பாளர்தான் வரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அவரை முன்மொழிந்தவரிடம் வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை கொடுத்து அனுப்பலாம்.

சின்னங்கள்

சின்னங்கள்

மனுக்கள் வாபஸ் பெறும் நிகழ்வு முடிந்ததும், இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்படும். அன்றே, பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அளிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+