பரவும் பன்றிக் காய்ச்சல் அபாயம்.. புதுக்கோட்டையில் ஒருவர் பலி
பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. அந்நோயின் அறிகுறியோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுகோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த நோயின் அறிகுறியோடு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே போன்று ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு பன்றிக்காய்ச்சலின் அறிகுறி தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அக்குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு அந்தக் குழந்தை தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கண்டறிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வீடு வீடாகச் சென்று பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது. என்றாலும், காய்ச்சல் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications