7ம் வகுப்பு மாணவியைக் கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
சேலம்: 7ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கடத்திப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் கிராமம், செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியின் 12 வயது மகள், தம்மம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி, காலை பள்ளிக்குச் சென்ற மாணவி மாலை வீடு திரும்பாததால் பதட்டமடைந்த அவரது தந்தை மகளைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ற இளைஞர் அச்சிறுமியை மும்பையில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்க வைத்திருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, தம்மம்பட்டி போலீஸார் மும்பை சென்று செல்வியை மீட்டுவர நடவடிக்கை எடுத்தனர். ஆனால், போலீசார் மும்பை வருவதையறிந்த குமார் சிறுமியுடன் நேற்று காலை, தம்மம்பட்டிக்கு வந்துள்ளார்.
தகவலறிந்த போலீசர், விரைந்து சென்று குமாரைக் கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று, பாலியல் வல்லுறவு கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சேலம் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்டுள்ள குமார் ஏற்கனவே மணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications