கொடநாடு கொலை- கொள்ளை: கேரளாவில் மேலும் ஒருவர் கைது
ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் கேள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குன்னூர்: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் கேள மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 24-ஆம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்க புகுந்த கும்பலை அங்கிருந்த காவலாளிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது அவர்கள் காவலாளிகளை கடுமையாக தாக்கினர்.

இதில் ஓம்பகதூர் என்ற காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் கிஷன் பகதூர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகினர்.
இதைத் தொடர்ந்து அந்த இருவரில் ஒருவரான மனோஜ்சாமி என்பவரை போலீஸார் இன்று கேரளா மாநிலம் ஆலப்புழையில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கொடநாடு அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோத்தகிரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்பு ஆஜர் படுத்தினர். 15 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையிக்கு கொண்டு செல்லப்பட்டார்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பாக போலீஸார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்துவிட்டார். மற்றொருவ் சயானும் விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
