'உனக்கு மதன் கதிதான்' ... கொலை மிரட்டல் விடுத்ததாக பச்சமுத்து மீது மேலும் ஒரு வழக்கு #pachamuthu
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து மீது மேலும் ஒரு கொலைமிரட்டல் வழக்கு சென்னை உயர்நீதிமான்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி 112 பேரிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் என்பது எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து மீது வழக்கு. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பச்சமுத்து.

தற்போது பச்சமுத்து மீது அடுத்தடுத்து மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. சென்னை சூளையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவரிடம் 2004ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். மெட்ரிகுலேசன் பள்ளியின் செலவுக்காக பச்சமுத்து சில நிலப்பத்திரங்களை அடமானமாகக் கொடுத்து 70 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆவணங்கள் போலியானவை எனத் தெரிய வந்ததால், கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி சென்னை மாம்பலத்தில் உள்ள பச்சமுத்துவின் அலுவலகத்துக்குச் சென்று மோகன்குமார் கேட்டபோது, மதனுக்கு ஆன கதிதான் உனக்கும் ஆகும் என்று பச்சமுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வேப்பேரி காவல்நிலையத்திலும், சென்னை மாநகரக் காவல்நிலையத்திலும் மோகன்குமார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகப் பச்சமுத்துவிடம் காவல்துறையினர் இன்னும் விசாரிக்காத நிலையில், பச்சமுத்து மீது போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யக் கோரி, மோகன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதனிடையே வேந்தர் மூவிஸ் மதன் மூலம் ஏழரை கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக சினிமா பைனான்சியர் போத்ரா அளித்த புகார் தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் கோரி பச்சமுத்து மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை அமர்வு நீதிமன்றத்தில் பச்சமுத்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications