ஓ.பி.எஸ்., கை ஓங்குகிறது.. மேலும் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., ஆதரவு !
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் மேலும் ஒரு எம்.,பி., மற்றும் எம்.எல்.ஏ., இணைந்துள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், மதுரை தொகுதி எம்.பி.,கோபால கிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க தற்போது இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் நீடித்து வந்த மௌனத்தை, ஒரே இரவில் கலைத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இதனால் தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பை அடைந்துள்ளது.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில், சசிகலா, தினமும் கூவத்தூர் சென்று நம்பிக்கையூட்டி வருகிறார். இருப்பினும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் மனநிலையிலேயே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சசிகலா கோஷ்டி அச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், மதுரை லோக்சபா தொகுதி எம்.பி.,கோபால கிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ் அணியில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு. இந்த எண்ணிக்கை விரைவில் உயரக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications