தமிழகத்தில் தொடரந்து அதிகரிக்கும் கொரோனா..இன்று பாதிப்பு 400-ஐ தாண்டியது.. கட்டுப்பாடுகள் வருமா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 386 ஆக இருந்த நிலையில் இன்று 401 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் இன்றும் கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்று கொரோனா பாதிப்பு 401 ஆக உயர்ந்துள்ளது. 215 ஆண்கள், 186 பெண்கள் என மொத்தம் 401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலம் 23 பேரும், கன்னியாகுமரி 22 பேரும் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்புக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 38,052- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 198 ஆகும். கொரோனா பாதிப்பைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,727 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை. நேற்று செங்கல்பட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் பொது மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை என்றும், கொரோனா பாதிப்புகள் எந்தவகையில் ஏற்பட்டாலும் பாதிப்புகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இன்று தமிழகசட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது பற்றி கூறுகையில், "தற்போதைய பாதிப்பு தனிநபர்களுக்கே பதிவாகி வருகிறது, குழு பாதிப்பு என்பது இதுவரை பதிவாகவில்லை. ஆகவே, பொது இடங்களில் முகககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
இணை நோய் உள்ளவர்கள் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டியது இல்லை. கொரோனா பாதிப்புகள் எந்தவகையில் ஏற்பட்டாலும் மருத்துவ கட்டமைப்புகள் தயார்நிலையில் வைத்து, பாதிப்புகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications