மதுரை நரபலி: மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது.. இதுவரை 7 கண்டுபிடிப்பு
மதுரை: மதுரையில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் மன நலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்ததாக கிளம்பியுள்ள புகாரின் பேரில் அவர்களது உடல்களைப் புதைத்ததாக கூறப்படும் இடத்திலிருந்து இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது.
பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் மன நலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்து சுடுகாட்டில் புதைத்ததாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் ஐஏஎஸ்ஸிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட இடத்தை தோண்டிப் பார்த்தபோது நான்கு எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்தார் சகாயம்.

அதன் பேரில் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பி.ஆர். பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, ஜே.சி.பி. டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேர் மீது தடயங்களை அழித்தல், சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு நாள் மட்டுமே தோண்டும் பணி நடந்த நிலையில் அந்த இடத்தில் மேலும் 10 அடிக்கு தோண்டிப் பார்க்க சகாயம் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் தோணுடம் பணி நடந்து வருகிறது. அதில் முதல் நாள் மேலும் 2 எலும்புக் கூடுகள் கிடைத்தன. இன்று இன்னொரு எலும்புக் கூடு சிக்கியது. இத்துடன் சேர்த்து மொத்தம் 7 எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.
இதனால் இந்த இடத்தில் நரபலி கொடுக்கப்பட்டவர்கள்தான் புதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications