அர்ஜூன் சம்பத்தை கொல்ல சதி: கோவையில் மேலும் ஒருவர் கைது
கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் மேலும் ஒருவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத். இவரைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த சதாம் உசேன், நவுசாத், ரகமத் துல்லா, உமரி, அப்துல்ரசீத் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கொண்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இச்சதிச் செயலில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், பதுங்கியுள்ள நபரைக் கைது செய்ய ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ஒரு வீட்டில் தேடப்பட்டு வரும் நபர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வீட்டைச் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த நபரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து அந்நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கைதானவர் நெல்லை மாவட்டம் விஜயாபதி பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்கலாம் மகன் குலாம் என்கிற சாகுல் அமீது(வயது 25) என்பது தெரியவந்தது.
மேலும், குலாமுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதில் தொடர்பு இருப்பது உறுதியானது. அத்துடன் அவர் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
சுரேஷ்குமாரை கொலை செய்வதற்காக சென்னைக்கு சென்றிருந்த குலாம் அங்கு கொலை திட்டத்தை முடித்துவிட்டு பின்னர் திருப்பூருக்கு வந்து பதுங்கி இருந்துள்ளார். சில தினங்களுக்கு பின்னர் கோவைக்கு வந்த குலாம் செல்வபுரத்தில் உள்ள உமரி என்பவரது வீட்டில் வசித்து அர்ஜூன் சம்பத்தை கொல்வது தொடர்பாக சதி திட்டம் தீட்டியதில் பங்கேற்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து குலாமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications