வெயில் கொடுமை.. ஜெ. பிரசார கூட்டத்தில் 2 பேர் பலி! விருதாசலத்தை தொடர்ந்து சேலத்திலும் சோகம்
சேலம்: சேலம் அருகே இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் வெயில் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதாசலத்தில் கடந்த வாரம் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது, வெயில் கொடுமையால் 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு, இழப்பீடு வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார். மேலும், அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும் ஜெயலலிதா கூறினார்.
இந்நிலையில், சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த, மேற்கு மண்டலம் மற்றும் கேரள அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.

இதற்காக காலை 11 மணிக்கெல்லாம் மாநாட்டு பகுதியில் அதிமுக தொண்டர்கள் உட்கார வைக்கப்பட்டனர். 4 மணிக்கு ஜெயலலிதா உரையாற்றினார். ஆனால், அதுவரை, வெயிலில் இருந்ததால் ஏற்பட்ட தாக்கத்தால், அதிமுக தொண்டர் பச்சையண்ணன் சுருண்டு விழுந்தார்.
அவரை ஆம்புலன்சில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியில் பச்சையண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரியசாமி என்பவரும் மயக்கமடைந்து உயிரிழந்தார். மேலும் 10 பேர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பல தரப்பட்ட தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications