ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து! திடீர் பிரேக்கால் தவறி விழுந்த 1 வயது குழந்தை
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடித்ததால் தாயின் மீது அமர்ந்திருந்த 1 வயது குழந்தை கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பயணிகள் பதைபதைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மதன் குமார், தனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளுடன் தனியார் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர்கள் பேருந்தின் நுழைவாயிலுக்கு வலதுபுறம் இருந்த இரட்டை இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

மதன் குமார் தனது இரண்டரை வயதுக் குழந்தையை மடியில் அமர வைத்திருந்தார். அவரது சகோதரி, தனது ஒரு வயதுக் குழந்தையைத் தோளில் சாய்த்து வைத்திருந்தார். இருவரும் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்து மீனாட்சிபுரம் சிக்னல் அருகே சென்றபோது, ஓட்டுநர் திடீரென அவசரமாக பிரேக் பிடித்தார். அப்போது மதன் குமாரும் அவர் கையில் இருந்த குழந்தையும் இருக்கையிலிருந்து கீழே விழுந்தனர். அதேசமயம், அவரது சகோதரியின் கையில் இருந்த குழந்தை பேருந்தின் படியில் விழுந்து, பின்னர் சாலையிலும் விழுந்தது.

இதைக் கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில், சைக்கிளில் புல் கட்டுகளை ஏற்றி வந்த ஒரு முதியவர் குழந்தையை உடனடியாகத் தூக்கினார். அதிர்ஷ்டவசமாக, குழந்தைக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. அதேபோல, பேருந்துக்குள் விழுந்த மதன் குமாரின் குழந்தைக்கும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாகப் பேருந்துகளில் பயணிக்கும்போது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் பேருந்தின் நுழைவு அல்லது வெளியேறும் வாயிலுக்கு அருகில் உள்ள இருக்கைகளில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

தூக்கக் கலக்கத்தில் பயணம் செய்யும்போது, குழந்தைகள் கையில் இருந்து நழுவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, பேருந்துகளில் பயணிக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தச் சம்பவம், பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. குழந்தை சாலையில் விழுந்தபோது வேறு ஏதேனும் வாகனம் வந்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். நல்லவேளையாக, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications