சிஎஸ்கே ஹோம் கிரவுண்ட் புனேவுக்கு மாற்றம்.. எல்லோருக்கும் முன்பே சொன்னது ஒன்இந்தியாதமிழ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் புனேக்கு மாற்றப்பட உள்ளது என்பதை எந்த ஒரு மீடியாவும் சொல்வதற்கு முன்பாக முதலில் செய்தியாக வெளியிட்டிருந்தது 'ஒன்இந்தியாதமிழ்'. தற்போது, அதை ஐபிஎல் நிர்வாகமும் வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Oneindia Tamil break the news first over CSK home ground shift

கடந்த 10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியபோது, போட்டியை எதிர்த்து அண்ணா சாலையே போர்க்களமானது. ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா, உள்துறை செயலாளரை சந்தித்து பேசி, கூடுதல் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினார்.
களேபரம் காரணமாக, அம்பயரை கூட அழைத்துவர மறந்து ஹோட்டலில் விட்டு வந்த ஐபிஎல் அதிகாரிகள், டாஸ் போடுவதை தாமதம் செய்ய காரணமாகினர்.

ஆட்டத்தின்போது மைதானத்திற்குள், காலணி வீசப்பட்ட சம்பவம் நடந்தேறியது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த ஐபிஎல் நிர்வாகம், அன்றைய தினம் இரவே, சென்னை அணியின் ஹோம் கிரவுண்ட்டை மாற்ற யோசித்தது.

இதுகுறித்து 10ம் தேதி இரவே, நமது 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளம் செய்தி வெளியிட்டது. புனேவுக்கு ஹோம் கிரவுண்டை சிஎஸ்கே மாற்றுவதற்கான காரணங்களையும் அதில் பட்டியலிட்டிருந்தோம். இந்த தகவலை எந்த ஒரு மீடியாவுக்கும் முன்பாக, முதலாவதாக, 10ம் தேதி இரவே வெளியிட்டது 'ஒன்இந்தியாதமிழ்'.

இந்த நிலையில்தான், நேற்று இரவுதான், ஹோம் கிரவுண்ட் மாற்றம் பற்றிய தகவல் வெளியாகி பிற ஊடங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
'Oneindia Tamil' was broke the news over the CSK team's home ground shift, on April 10th itself, well before other medias.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற