For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்ப்பு எதிரொலி.. சென்னைக்கு பதில் புனே நகருக்கு இடம் பெயருகிறதா சிஎஸ்கே 'ஹோம் கிரவுண்ட்'?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    போராட்டம் காரணமாக யாரும் வராததால் சேப்பாக்கம் மைதானம் வெறிச்சோடியது- வீடியோ

    சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் பெரும் போராட்டம் இன்று வெடித்த நிலையில், அடுத்த போட்டி சென்னையில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ஐபிஎல் நடத்துவோருக்கு இரு வகைகளில் வருமானம் கிடைக்கிறது. விளம்பரதாரர் வருவாய் மற்றும், டிக்கெட் விற்பனை வருவாய் மூலம் பணம் கிடைக்கிறது.

    காவிரி விவகாரத்தால், சேப்பாக்கம் மைதானத்தில் இன்று, ஐபிஎல் நடத்த கூடாது என போராட்டக்காரர்கல் போராட்டங்கள் நடத்தியதால் அண்ணா சாலை போர்க்களமானது.

    இருக்கைகள் காலி

    இருக்கைகள் காலி

    இதனால் 40,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 3000 பேர் மட்டுமே ரசிகர்கள் இருந்தனர். இதனால் மைதானத்தின் பெரும் பகுதி காலியாக இருந்தது. சாலைகளை வழி மறித்து மஞ்சள் ஜெர்சி அணிந்து வந்த, ரசிகர்களை சிலர் தாக்கி அவர்கள் ஆடைகளை களைந்தனர்.

    பெரும் கலாட்டா

    பெரும் கலாட்டா

    இதேபோல மைதானத்தின் அருகேயும் ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியை சிலர் கழற்றி விரட்டியடித்தனர். உருட்டுக் கட்டைகளாலும் தாக்குதல் நடைபெற்றது. பல ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்ட நேரத்திலும் இதுபோன்ற தாக்குதல் நடந்துள்ள்ளது. எனவே, அடுத்த போட்டியின்போது சேப்பாக்கத்திற்கு ரசிகர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

    வருவாய் பாதிக்கும்

    வருவாய் பாதிக்கும்

    ரசிகர்கள் வராவிட்டால் இங்கே கிரிக்கெட் போட்டி நடத்தி பலன் இல்லை. கிடைக்கும் வருவாயில் கணிசமான அளவுக்கு குறையும். மே 3ம் தேதிதான் மத்திய அரசு காவிரி தொடர்பாக வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளது. எனவே அதுவரை நடைபெறும் போட்டிகளுக்கு எதிர்ப்பு கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    டோணி அணி

    டோணி அணி

    சென்னையில் இவ்வளவு சிரமங்களுக்கு நடுவே போட்டியை நடத்துவதற்கு பதில், சென்னை அணி ஆடும் போட்டிகளை புனே நகருக்கு மாற்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. புனே அணி கடந்த இரு வருடங்களாக ஆடியது. அந்த அணி கலைக்கப்பட்டுள்ளது. புனே கேப்டனாக டோணி செயல்பட்டார். எனவே புனே நகர மக்களும் சென்னையை போல, டோணியை மண்ணின் மகனாகவே பார்க்கிறார்கள். எனவே புனே மைதானத்திற்கு போட்டியை மாற்றி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புள்ளது.

    English summary
    The Chennai team is likely to change its home ground to Pune.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X