தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் வரலாறு காணாத விலை ஏற்றம் போன்றவற்றை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிய பேச்சுக்களை திமுகவினர் வைரலாக்கி வருகிறார்கள்.
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் பேசும்போது பிரதமர் மோடியின் ஆட்சி நிர்வாகத்தையும் அதிமுக மற்றும் பாமகவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்..

தயாநிதி மாறன் கணிப்பு
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் உள்ள தாய்மார்கள் இனி விறகு அடுப்பில் சமைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று மார்தட்டிச் சொன்னார், ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது
இப்போது நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதோடு, அதன் விலையும் சாமானிய மக்கள் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது.. இந்தியா இதுவரை அணிசேரா நாடாக தனித்துவத்துடன் விளங்கியது, ஆனால் இப்போது அதானிக்காக அமெரிக்கா மிரட்டுவதைப் போல மோடி செயல்படுகிறார்..
அன்புமணி ராமதாஸ்
இந்தியா யாரிடம் சிலிண்டர் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும் நிலைக்கு மோடி நாட்டை அடிமையாக்கிவிட்டார், தொலைக்காட்சியில் மோடியின் முகம் வந்தாலே மக்கள் பீதியடையும் சூழல் நிலவுகிறது, அவருக்கு இந்தியா அல்லது தமிழ்நாடு பற்றி எந்தக் கவலையும் இல்லை, மாறாகத் தனது நண்பர்களை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார் என்றெல்லாம் தயாநிதி மாறன் சாடினார்..
தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன், அன்புமணி தனது அப்பாவை தலையணை வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று டாக்டர் ராமதாஸே கூறுகிறார்.. தன்னை உலகிற்கு அடையாளம் காட்டி அமைச்சராக்கிய சொந்தத தந்தைக்கே துரோகம் இழைத்தவர் அன்புமணி., வாங்கிய காசுக்காக எங்கோ சென்று கூவிக்கொண்டிருக்கிறார். முதலில் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் அவருக்குப் புண்ணியம் கிடைக்கும்.
துரோகம் செய்யும் மோடி
எடப்பாடி பழனிசாமியுடன் நான் 8 ஆண்டுகள் பயணித்தவன் என்பதால் அவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்., தன்னை வளர்த்துவிட்ட கட்சிக்கும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, தற்போது சசிகலாவுக்கும் ஆப்பு வைத்துவிட்டார்..
வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், அதிமுக முற்றிலும் துடைத்தெறியப்படும். வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. தமிழகத்தில் அத்தகைய சம்பவங்கள் நடந்தால் முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார், தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மோடி மற்றும் துரோகிகள் அனைவரும் இணைந்து அமைத்துள்ள இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று தயாநிதி மாறன் கூறினார்.
எல்கே சுதீஷ்
தொடர்ந்து பேசிய எல்கே சுதீஷ், சிலிண்டர் தட்டுப்பாட்டால் சுமார் 25 லட்சம் ஹோட்டல் ஊழியர்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உணவு கிடைக்கும் என்ற அவல நிலை உருவாகி உள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வரக்கூடத் தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது..
4 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இப்தார் நோன்பின் போது, சிலிண்டர் கிடைக்காமல் விறகு அடுப்பில் கஞ்சி காய்ச்ச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். திருமண மண்டபங்களிலும் சிலிண்டர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது..
200 தொகுதிகள்
உலக நாடுகள் அனைத்தும் தனக்கு நண்பர்கள் என்று பிரதமர் மோடி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார், ஆனால் உண்மையில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு 6 மாதங்களுக்கு இருக்க வேண்டிய நிலையில், இப்போது இருப்பு ஏதும் இல்லை, தனது நண்பர்களுக்காக நாட்டை மோடி அடிமையாக்கி வருகிறார், அதிமுக இந்த தேர்தலில் முற்றிலும் வாஷ் அவுட் ஆகும்..
ஏற்கனவே திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது, தற்போது தேமுதிக இணைந்திருப்பதால் அந்த வெற்றி எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரும் என்று சுதீஷ் தன்னுடைய பேச்சின்போது நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications